கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Sep 16, 2023
1159
கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆயிரத்து 80 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களில் 624 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகள் வாங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் 2 முதல் 3 விழுக்காடு வரை இருந்த இறப்பு விகிதம் நிபா வைரசால் 40 முதல் 70 விழுக்காடு வரை இருப்பதாகவும் தெரிவித்த ராஜீவ் பால், இந்த நோய்த்தொற்று வவ்வால்களிடமிருந்து பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
Sep 16, 2023
1159
கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆயிரத்து 80 பேர் என தெரிய வந்துள்ளது. இவர்களில் 624 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்துகள் வாங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் 2 முதல் 3 விழுக்காடு வரை இருந்த இறப்பு விகிதம் நிபா வைரசால் 40 முதல் 70 விழுக்காடு வரை இருப்பதாகவும் தெரிவித்த ராஜீவ் பால், இந்த நோய்த்தொற்று வவ்வால்களிடமிருந்து பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் : ICMR நடத்திய ஆய்வில் தகவல்
Jun 09, 2023
2126
இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கோவாவின் மொத்த மக்கள் தொகையில் 26.4 சதவீதம் பேரும், புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேரும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இருந்தநிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.வழக்கமான சர்க்கரை நோய் தாக்கத்தை விட அதிகமாக சர்க்கரை இருப்பது, நீரழிவுக்கு முந்தைய நிலை என குறிப்பிட்டுள்ள ஐசிஎம்ஆர், நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நிலையில் இருப்பதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 15.3 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குரங்கு அம்மை கண்டறிய 15 வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்கள் தயார் - ICMR
Jul 15, 2022
1214
நாடு முழுவதும் குரங்கு அம்மை கண்டறிய 15 வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய்த்தொற்றை கண்டறிய புனேயில் உள்ள ஐசிஎம்ஆர் - என்ஐவி அமைப்பினரால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, குரங்கு அம்மை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள வழிகாட்டுதலில், சர்வதேச விமான பயணிகள், உடல்நலக் குறைவு உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொசுக்களை கொண்டே நோய்பரவலை கட்டுப்படுத்தும் புதிய முறை அறிமுகம்
Jul 06, 2022
1767
டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்கள் மூலம், நோய்பரவலை கட்டுப்படுத்தும் ஒரு நவீன முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன.புதுசேரியில் கடந்த 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் ஊள்ளுர் நீர்நிலைகளில் விடப்படும்.அதனுடன் ஆண் கொசு இணையும் போது, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் என, ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
May 01, 2022
4112
அண்மைகாலமாக உள்ளூர் அளவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கொரோனா 4ஆம் அலையின் தொடக்கமாக கருத முடியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த கவுன்சிலின் கூடுதல் இயக்குநரான சமிரன், சில பகுதிகளில் தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பரிசோதனை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.மேலும், சில மாவட்டங்களில் மட்டும் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு, நாடு முழுவதும் சீராக பரவவில்லை என்பதால் அதனை புதிய அலையாக கருத முடியாது என்றும் சமிரன் குறிப்பிட்டுள்ளார்.
2 மணி நேரத்தில் ஒமைக்ரான் தொற்றை கண்டுபிடிக்கும் கருவி ; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைப்பு
Dec 12, 2021
2138
2 மணி நேரத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா-வை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட அடுத்த நாளே, அசாம் மாநிலம் டிப்ருகரில் உள்ள ICMR ஆய்வகத்தில் ஒமைக்ரானை அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கினர்.அதன் மூலம் 1000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் ஒமைக்ரான் தொற்றை இரண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.தற்போது கொல்கட்டாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கருவி அடுத்த வாரம் முதல் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை வசதி உள்ள ஆய்வகங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தலால், விமான நிலையங்களில் பரிசோதனை முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு இது நிவாரணமாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை படிப்படியாக திறக்க வேண்டும் - ஐசிஎம்ஆர் கருத்து
Sep 28, 2021
4685
முதலில் தொடக்கப்பள்ளிகளையும், அதன் பிறகு உயர்நிலைப் பள்ளிகளையும் படிப்படியாக திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆலோசனை கூறியுள்ளது.இந்தியாவில் 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் 32 கோடி சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கூறியதை மேற்கோள்காட்டி, The Indian Journal of Medical Research ஆய்விதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.தற்போது கற்றலில் சமமான வாய்ப்புகள் இல்லாததால் பெரிய இடைவெளி நிலவுவவதும், கொரோனாவுக்கு முந்தைய முறையில் கல்வியைத் தொடர்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களையும், இளையோர்க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள அளவு, மூன்றாவது அலைக்கான சாத்தியங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
67 சதவீத இந்தியர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் - ஐசிஎம்ஆர்
Jul 20, 2021
2768
67 சதவீத இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய 4வது கட்ட செரோசர்வேயில் தெரியவந்துள்ளது.நாட்டில் 70 மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ரத்த அணுக்களின் ஆய்வு எனப்படும் செரோசர்வே நடத்தப்பட்டது. அதன்படி, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு நபர்களுக்கு பெருந்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.எனினும் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் கொரோனா பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
Dec 18, 2020
1318
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நிபுணரான அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இதே போன்று உத்ரகண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னைத் தானே, சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய கொரோனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்
Oct 22, 2020
1316
மிகக் குறைந்த செலவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள, கரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் துல்லியமான முடிவுகளை அறிய பின்பற்றப்படும், பிசிஆர் பரிசோதனைக் கருவியின் மதிப்பு 25 லட்ச ரூபாய்.ஆனால், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள கோவிராப் எனும் கருவியின் விலை, 5,000 ரூபாய்க்கும் குறைவு என கூறப்படுகிறது.பரிசோதனை கிட்டின் விலை 500 ரூபாய் எனவும், கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள இக்கருவி பெரிதும் உதவும் எனவும் கூறப்படுகிறது.
கொரோனாவில் இருந்து எனது உயிரை காப்பாற்றிய பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை முறையை ஐசிஎம்ஆர் நீக்க கூடாது - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்
Oct 21, 2020
1459
கொரோனாவில் இருந்து தனது உயிரை காப்பாற்றிய பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை முறையை, ஐசிஎம்ஆர் நீக்க கூடாது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.கொரோனா சிகிச்சை தொடர்பான தேசிய வழிகாட்டு நெறிமுறையில் இருந்து பிளாஸ்மா தெரபியை நீக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தான் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிளாஸ்மா தெரப்பி சிகிச்சையால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிட்ட சத்யேந்தர் ஜெயின், அதனை நீக்க கூடாது என்று ஐசிஎம்ஆரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து ஒருவர் குணமடைந்த பிறகும் முன்னெச்சரிக்கை அவசியம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர்
Oct 20, 2020
1957
கொரோனா தொற்றில் இருந்து ஒருவர் குணமடைந்த பிறகும், தொடர்ந்து முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதித்த ஒருவரின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி 5 மாதங்களில் குறைந்து விடும் என்பதால், அலட்சியமாக இருந்தால் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் 64 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருப்பதாக தெரிவித்தார்.
இரு கட்ட சோதனைகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில், மூன்றாம் கட்ட சோதனையை தொடங்குகிறது ’கோவேக்சின்’ தடுப்பூசி
Oct 12, 2020
5070
இரண்டு கட்ட பரிசோதனைகளில், கொரோனா தடுப்பு மருந்தான, 'கோவேக்சின்' பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில், துவக்கப்பட உள்ளது.ஐதராபாதில் செயல்பட்டு வரும், பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.தமிழகத்தில், காட்டாங்கொளத்தூரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரியில், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அங்கு, முதற்கட்டமாக, 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், வெற்றி கிடைத்ததாக, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதை தொடர்ந்து, 150க்கும் மேற்பட்டோருக்கு மருந்து செலுத்தப்பட்டு, இரண்டாம் கட்ட பரிசோதனை நடந்தது. அடுத்ததாக, இம்மாத இறுதிக்குள், மூன்றாம் கட்ட பரிசோதனை துவக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை கண்டறிவதற்கான ஆய்வு: பொது சுகாதாரத்திட்ட இயக்குநர் தகவல்
Oct 06, 2020
2612
தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக, 30 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளதாக, பொது சுகாதாரத்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னர் இரண்டு கட்ட ஆய்வுகளை நடத்தியிருந்தது.இந்நிலையில் கொரோனா பரவலின் நிலையை கண்டறியும் ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்திட்ட இயக்குநரகம் முடிவெடுத்துள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு புரதங்கள் உருவாகியுள்ளதா என கண்டறியும் ரத்த சீரம் ஆய்வுக்காக, வரும் வாரத்தில் 30 ஆயிரம் பேரிடம் இரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட உள்ளது.இதன் மூலம் கொரோனா பாதிப்பின் நிலை, அது அதிகரிக்கும் போக்கில் உள்ளதா, குறையும் போக்கில் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu